காவியன் பள்ளியில் 2012ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. பண்டிகை குறித்த கதையை சில மாணவர்கள் எடுத்துரைத்தனர். ஆசிரியை சாந்தி, விநாயகர் சதுர்த்தி குறித்த பல்வேறு கதைகளை எடுத்துக் கூறினார். விநாயகர் சதுர்த்தி தினத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆடப்படும் பாரம்பரிய நடனத்தை மாணவர்கள் ஆடினர். மாணவர்களின் நடன அசைவுகளை குழந்தைகள் கண்டு ரசித்தனர். சுற்றுச்சூழலுக்கு ஊறு ஏற்படுத்தாத சிலைகளை பயன்படுத்த வேண்டும் என பள்ளி ஊழியர்களுக்கு தலைமை ஆசிரியை அறிவுரை வழங்கினார்.