“தை பிறந்தால் வழி பிறக்கும்”
உலகத்திலுள்ள தமிழ் மக்கள் அனைவராலும்
கொண்டாடப்படும் தைப்பொங்கல் நம் காவியன் பள்ளியிலும்
மிகச்சிறப்பாக சமத்துவப்பொங்கலாக பொங்கலிட்டு
கொண்டாடப்பட்டது.
மாணவ மாணவிகளின் நடனம், பாட்டு, பல குரலில்
பேசுதல் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
குறிப்பாக தமிழர்களின் தனிப்பெரும் சொத்தாக இருக்கும்
நாட்டுப்புறபக் கலைகளான கரகாட்டம், சல்லிக்கட்டு, சிலம்பம்,
மயிலாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம்
ஆகியவற்றை எம் பள்ளி மாணவர்கள் தனித்தனியாக தங்கள்
நடனத்தின் மூலம் வெளிப்படத்தி அனைவரையும் பரவசத்தில்
ஆழ்த்தினார்கள்.
பின்பு எம் பள்ளி முதல்வர் அனைத்து குழந்தைகளுக்கும்
ஆசிரியர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகளைக் கூறினார்.
இறுதியில் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.