பலவாரங்கள் தொடர்ந்து தயாரிக்கப்பட்ட பின்னர், 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி, விளையாட்டு தினத்தில் பங்கேற்க மாணவ-மாணவிகள் தயாரானார்கள். கடவுள் வாழ்த்தினைத் தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியை தேசியக் கொடி மற்றும் ஒலிம்பிக் கொடியை ஏற்றிவைக்க, விழா தொடங்கியது. காவியன் பள்ளியின் இளம் குழந்தைகளின் அணிவகுப்புடன் உறுதிமொழியேற்பு, ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. உடற்பயிற்சி ஆசிரியர்கள் இதற்கு தலைமையேற்றனர். அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஓட்டப்பந்தயம், தடை ஓட்டம் முக்கிய போட்டிகளாக நடத்தப்பட்டன. யோகா, கராத்தே மாணவ-மாணவிகள் நடத்திய நிகழ்ச்சிக்கு வண்ணம் சேர்த்தது. தவளை ஓட்டம், வாத்து நடை, பள்ளிக்கு தயாராகுதல், தடை ஓட்டம், செங்கல் நடை, எலுமிச்சை-ஸ்பூன் போட்டி போன்றவை குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தன.
விளையாட்டுப் போட்டிகளை பார்வையாளர்கள் ரசித்துப் பார்த்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள்-ஆசிரியர்களின் குழு புகைப்படத்துடன் விழா நிறைவடைந்தது.