தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள்
கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இப்பண்டிகை இந்தியா உட்பட பல
நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில்
கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக்
கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நமது காவியன் பள்ளியில் தீபாவளி சிறப்பாக
கொண்டாடப்பட்டது. நம் பள்ளியில் தீபத்திருநாள் உருவான கதை,
பாடல், நகைச்சுவை நாடகம், நடனம் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக
அரங்கேற்றப்பட்டன.
பள்ளி தலைமையாசிரியை அவர்கள் பட்டாசு
வெடிக்கும்போது கருத்தில் கொள்ளவேண்டிய பாதுகாப்பு முறைகள் பற்றி
விளக்கினார். இறுதியாக இனிப்புகள் வழங்கி விழா இனிதே நிறைவு
பெற்றது.