அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
விழாக்கள்
 தீபாவளி கொண்டாட்டம் 2013

குழந்தைகளால் பெரிதும் விரும்பப்படும் பண்டிகையான தீபாவளி, அக்டோபர் 30ம் தேதி கொண்டாடப்பட்டது, தீபாவளிப் பண்டிகையின் நோக்கம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. தீபாவளி பற்றி ஆசிரியர்கள் பாடல் பாடினர். 4 முதல் 8ம் வகுப்பு வரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், கேரளா மற்றும் அஸ்ஸாமில் கொண்டாடப்படும் தீபாவளிக் கொண்டாட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் அந்தந்த மாநிலங்களின் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனர். தீபாவளியைக் குறிக்கும் நட்சத்திர பட்டாசுகளை மாணவர்கள் வெடித்தனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். தீபாவளிப் பாடலுக்கு எல்கேஜி, யுகேஜி குழந்தைகள் நடனமாடினர். இதன்மூலம் அனைவரும் வேடிக்கை மற்றும் மகிழ்ச்சியில் திளைத்து தீபாவளியைக் கொண்டாடினர்.

செய்திகள்
Project-Management-Char