அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 ஆண்டு விழா 2018

"கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு"
"ஆயக்கலைகளைப் புகுத்துவதே கல்வியின் நோக்கம்.".



நமது காவியன் பள்ளியின் 10வது ஆண்டு விழா நவம்பர் மாதம் 30ஆம் நாள் வெள்ளிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ஆண்டு விழா குழந்தைகளின் கடவுள் வாழ்த்தோடும், பள்ளி தாளாளர் திரு. சி. தீனதயாளபாண்டியன் அவர்களின் கணிவான தலைமையோடும் தொடங்கப்பட்டது. நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களின் முன்னிலையில் மாலை 6:15 க்கு துவங்கப்பட்டது.

விழாவில் துணைத் தலைமையாசிரியை நிகழ்ச்சி நிரல் வாசித்தார். பிறகு பள்ளியின் இரண்டாம் நிலை ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை வாசித்தார். பள்ளி தலைமையாசிரியர் அவர்கள் 2017-2018ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வாசித்தார். பிறகு விழாவில் பள்ளியின் தேர்வுகளில் முதல் மதிப்பெண் மற்றும் 100% வருகை பதிவு பெற்ற மாணவச்செல்வங்களுக்கு பெற்றோர்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டது. பிறகு மாணவமணிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. விழாவின் நிறைவாக தொடக்கநிலை ஒருங்கிணைப்பாளர் நன்றியுரை வாசித்து நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

நமது காவியன் பள்ளியின் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் அனைவருக்கும் நல்விருந்தாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது, சிறப்புக்குரியது.

செய்திகள்
Project-Management-Char