2013 ஜூலை 17ம் தேதி பசுமை தினம் கொண்டாடப்பட்டது. வகுப்பு அறைக்கு இயற்கை வரவழைக்கப்பட்டது. பசுமை காய்கறிகள், பொம்மைகள், முருங்கையுடன் பூங்கொத்து, உள்ளிட்டவை வகுப்பறையில் வைக்கப்பட்டிருந்தன. பசுமையை உணர்த்தக்கூடிய வகையில் அனைத்து குழந்தைகளும் பச்சை வண்ணத்திலான உடைகளை அணிந்து வந்திருந்தனர். வண்ணம் தீட்டுதல், காய்கறிகள் போன்ற வேடமணிந்து நடனம் போன்றவையும் நடத்தப்பட்டதால், குழந்தைகள் அனுபவித்து மகிழ்ந்தனர். எல்கேஜி, யுகேஜி குழந்தைகளின் அணிவகுப்பு இறுதியாக நடைபெற்றது. மற்ற வகுப்புகளைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும், குழந்தைகளை ஊக்குவித்து கைதட்டி வரவேற்றனர். இதன் மூலம் இந்த நாள் மறக்கமுடியாத தினமாக அமைந்த்து.