அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 இயற்கை வேளாண்மை கண்காட்சி 2019

7ஆம் வகுப்பு மாணவர்கள் சார்பாக நமது பள்ளியில் “இயற்கை வேளாண்மை கண்காட்சி” கடந்த 25.01.2019 வெள்ளியன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது.
இக்கண்காட்சியில் இயற்கை வேளாண்மையில் விளைந்தப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதில் நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, தினை, வரகு, இரும்புச்சோளம்,குதிரைவாளி என தானிய வகைகளும், பயறுவகைகளும், காய்கறிகளும், கீரை வகைகளும், மருத்துவச் செடிகளும் , பழங்களும் , மரக் கன்றுகளும், இயற்கை உணவு வகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன.

இக்கண்காட்சியில் மண்ணியல் ஆய்வு, நீரியல் ஆய்வு குறித்தும் வைக்கப்பட்டன. இயற்கை உரங்கள், வேம்பு , கொளுஞ்சி, அவரி , தும்பை , எருக்கம், மஞ்சனத்தி என தழை உரச் செடிகளும் வைக்கப்பட்டன. இயற்கைத் தெளிப்பான் - பஞ்சகவ்வியம் (பால் , தயிர் , கோமியம் , நெய் , சாணம்) வைக்கப்பட்டது.
இக்கண்காட்சியில் தொடக்கக் கல்வி மாணவர்கள் முதல் உயர்நிலைக் கல்வி மாணவர்கள் வரை பார்த்து மகிழ்ந்தனர்.
இக்கண்காட்சியின் நோக்கம்: இயற்கை வேளாண்மையைப் பற்றி எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்வதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும்.

செய்திகள்
Project-Management-Char