காவியன் பள்ளியில் ஏற்றமிகு எட்டாம் ஆண்டு ஆண்டுவிழா கொண்டாட்டம் 05.11.2016 அன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கடவுள் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை நம் பள்ளி ஒருங்கிணைப்பாளரால் வாசிக்கப்பட்டது.
பள்ளியின் 2015-2016 ஆம் கல்வி ஆண்டின் நிகழ்வுகளை தொகுத்து ஆண்டரிக்கையாக ஆங்கில வடிவில் வழங்கினார் நம் பள்ளி முதல்வர், அவரை தொடர்ந்து தமிழில் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. பிறகு வந்திருப்பவர்களை வரவேற்கும் விதமாக வரவேற்பு நடனம் - மூன்று மாநில நடன அசைவுகளுடன் அற்புதமாக ஆடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிராமத்துக் குத்துக்கு குத்தாட்டம் ஆடி அனைவரது கைத்தட்டுகளையும் அள்ளினர் நம் மாணாக்கர்கள். வந்திருப்பவர்களை சிரிக்க வைப்பதற்காக மருத்துவனையில் அரங்கேறிய நிகழ்வுகளை நம் மழைலையர்கள் ஆங்கில நகைச்சுவை நாடகமாக நடித்துக் காட்டி அசத்தினார்கள். அடுத்ததாக எழுபதுகளின் நடன அசைவுகளை நம் கண்முன் கொண்டுவந்து (hippies hop) மகிழ்வித்தார்கள்.
இதனைத்தொடர்ந்து மேற்கத்திய பாடல்களை இசையோடு ராகம், தாளம் மாறாமல் (Karaoke) ஆசிரியைகளோடு மாணவர்களும் பாடி இசைச்சாரலில் நம்மை நனைத்தது இனிமையாக இருந்தது. இறுதியாக கோபியர்கள் கண்ணனுடன் ராதை நடனத்திற்கு நடனமாடி கோகுலத்தை நம் கண்முன் கொண்டு வந்தார்கள். ஒவ்வொரு கலை நிகழ்ச்சிக்குப் பிறகும் முதல் மதிப்பெண் பெற்றவர்கள், 100% வருகைப் பதிவு எடுத்தவர்கள், விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள், மதிலகப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள், ஓவியப் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் என்று குழுக்களாக பிரித்து சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது. கடைசியாக வந்திருந்தோர்க்கு நன்றிபாராட்டும் விதமாக நம் பள்ளி தமிழாசிரியை நன்றியுரை வழங்கினார்.
நாட்டுப்பண்ணுடன் விழா சிறப்பாக இனிதே நிறைவு பெற்றது.