2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி கே.ஜி குழந்தைகள் சிகப்பு வண்ணத்த்தில் உடையணிந்து வந்து, சிகப்பு உறையிடப்பட்ட சாக்லேட்களை மற்ற மாணவர்களுக்கு வழங்கினர். இளம் தேவதைகளைப் போன்று அந்த காட்சி அமைந்ததுடன், சிகப்பு பலூன்களையும், சிகப்பு வண்ண பொம்மைகளையும் கையில் ஏந்தி வந்தனர். காய்கறிகள் உள்ளிட்ட அனைத்தும் சிகப்பு வண்ணத்தில் இருந்தன.
சிகப்பு வண்ணங்களில் இருந்த பொருட்கள் குறித்து ஆசிரியர்கள் கே.ஜி குழந்தைகளிடம் எடுத்துக் கூறினர். ஆச்சர்யம், சக்தி, வேகம், வலு போன்றவற்றை சிகப்பு வண்ணம் குறிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். அந்த நாள் முழுவதும் வேடிக்கையும், விளையாட்டுமாகக் கழிந்தது. சிகப்பு தின வாழ்த்துகளுடன் கூடிய கை ரிப்பனை அணிந்து, குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச் சென்றனர்.