நம் நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னணியில் உள்ள போராட்டங்களை ஒவ்வொரு இந்தியனும் எப்போதும் நினைவில் கொணடிருப்பதுடன், சுதந்திர தினத்தில் அதற்கு முக்கியத்துவம் அளித்து, நாட்டிற்கு மரியாதை செலுத்த வேண்டும்.
காவியன் பள்ளியிலும் சுதந்திர தினம் உரிய தேசபக்தியுடன் கொண்டாடப்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் திருமதி. பாண்டியம்மாள், தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். மாணவிகளின் தேச பக்திப் பாடல்கள், சுதந்திர தின கொண்டாட்டத்தின் முக்கியத்துவம் பற்றி 7-ம் வகுப்பு மாணவியின் பேச்சு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை பறைசாற்றும் வகையிலான 6,7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவிகள் பங்கேற்ற நடனம் ஆகியவை நடத்தப்பட்டன.