அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 திறன் வெளிப்பாடு கண்காட்சி-2015

‘வெற்றி பெறுவது மிகவும் எளிது, என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய், செய்வதை விரும்பிச் செய், செய்வதை நம்பிக்கையோடு செய்’ என்கிற எண்ணங்களை ஊக்கப்படுத்தி வளப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மாணவர்களுக்குப் பல்திறன் போட்டிகளை நடத்தி வருகிறது, திண்டுக்கல் அருகேயுள்ள அம்மையநாயக்கனூரில் அமைந்துள்ள காவியன் பள்ளி.
இந்த வருடத்திற்கான பல்திறன் போட்டிகள் கடந்த ஜனவரி 10.1.2015 அன்று நடத்தப்பட்டது. மதுரையைச் சுற்றியுள்ள 11 பள்ளிகளிலிருந்து மாணாக்கர்கள் கலந்துகொண்டு தமது தனித் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மாறுவேடப்போட்டி, திருக்குறள் ஒப்பித்தல், நவீன ஓவியம் வரைதல், பிழை திருத்துதல், Be a spell charm ஆகிய போட்டிகள் நிகழ்த்தப்பட்டன.
இரண்டு மணி நேரம் நடந்த இப்போட்டிகளில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி சுழற்கோப்பையை வென்றது.
பல்திறன் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

செய்திகள்
Project-Management-Char