மாணவர்கள் பொதுவாக வகுப்பறை கற்றலை விட வகுப்பறைக்கு வெளியே கற்கும் கற்றலையே அதிகம் விரும்புவார்கள். அதுவே அவர்களுக்கு அனுபவப் பாடமாகவும் அமையும். அந்த வகையில், எம் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் ஆறாம் வகுப்பு மாணவர்கள் வரை களப் பயணக் கல்விக்காக,
2019-2020-ம் கல்வியாண்டில் காவியன் பள்ளியில் ஏழாம், எட்டாம் மற்றும் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவியர்கள் 05.08.2019 - அன்று காந்திகிராமம் அறக்கட்டளை மற்றும் பல்கலைக்கழகம் களப்பயணம் சென்றனர்.
முதலில் மூலிகைகளை வைத்துப் பொருட்கள் தயாரிக்கும் லக்ஷ்மி சேவா சங்கம் சென்றனர். அங்குள்ள அலுவலர் அவற்றைப் பற்றிய விளக்கங்களைக் கொடுத்தார். மேலும் ‘காந்தி கிராமம்’ பெயர் காரணம் மற்றும் உருவான விதம் விளக்கினார்.
அடுத்ததாக பல்கலைக்கழகம் சென்றபின் அங்குள்ள பேராசிரியர் மக்கள் தொடர்பு உதவி அலுவலர் திரு.இராமச்சந்திரன் அவர்கள் இடத்தின் சிறப்பு மற்றும் பல்கலைக்கழகம் இயங்கும் முறை பற்றி விளக்கினார். சுயதொழில் வேலைவாய்ப்பு (அப்பளம் , சோப்பு) ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி, மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி (யமஹா தொழிற்பயிற்சி கூடம்) பற்றிய விபரங்களை நேரடியாகக் கண்டறிந்தனர்.
பின்பு நிர்மாணத்திட்ட காட்சியகம் சென்று மகாத்மா பற்றிய அரியவகைப் புகைப்படங்கள், சமூகம், விவசாயம், அறிவியல் தொழில்நுட்பம் பற்றிய புகைப்படங்கள், சூரிய ஒளி மூலம் இயங்கும் சாதனங்களைக் கண்டறிந்த பின்னர் பள்ளிக்குத் திரும்பினர்.